ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட, ஹட்டன் புனிதஜோன் பொஸ்கோ கல்லூரிக்காக, ஒரு கோடியே 14 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் இன்று (04)இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது
புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் கடந்த மூன்று தசாப்த காலமாக போதியளவு கட்டிட வசதிகள் இன்மையால், மாணவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டனர். இந்நிலையில் கடந்த 2019 ஏப்ரல் மாதம், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் மேற்படி பாடசாலைக்கு இரண்டு மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணி ஆரம்பமானது.
பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாமல் இருந்தது. இதனயைடுத்து கடந்த 2 ஆம் திகதி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது பிள்ளைகள் கல்வி பயிலும் வகுப்பறை ஆபத்தாக காணப்படுகின்றது எனவும், இதனால் புதிய கட்டிடத்தை திறக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர், அதுமட்டுமல்ல அதுவரை பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதில்லை எனவும் முடிவெடுத்தனர்.
இது தொடர்பில் ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர், ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டுவந்தனர். இந்நிலையிலேயே கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்