ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொட்டுலாகலை தோட்டத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹப்புத்தளை பொலிஸின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மேற்படி தோட்டத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கு சுற்றிவளைப்பு – தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.
இதன்போது வீட்டிலிருந்து 162000 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதோடு 42 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
ராமு தனராஜா










