ஹப்புத்தளை – வெலிமடை பிரதான பாதையில் ஆட்டோவொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.


ஆட்டோ பலத்த சேதங்களுக்குள்ளாகியதுடன், உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆட்டோவில் பயணித்த சாரதி உட்பட மூவருக்கு சிறு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
ஹப்புத்தளை பொலிசார் இவ் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.










