ஹப்புத்தளையில் கடைக்குள் புகுந்து தாலிக்கொடி பறிப்பு – தப்பியோடிய இருவர் கைது !

ஹப்புத்தளை, பெரகலை கீழ் வியாரகலை பகுதியில் மரக்கறி கடைக்குள் புகுந்த இருவர், கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி அவர் அணிந்திருந்த தாலி உட்பட நான்கு பவுன் தங்க சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹப்புதளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஹப்புதளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் பெரகளை பிளகவுட் பகுதியில் வைத்து , மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரையும் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தினர்.

மோட்டார் சைக்கிளின் இலக்கதகடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டு இருந்துள்ளது.

அத்துடன், தாலி உட்பட தங்க சங்கிலியையும் மீட்டுள்ளனர். இதன் போது 49.50வயதுடைய இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று பண்டாரவளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று ஹப்புதளை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles