ஹப்புத்தளை, யஹலபெத்த – பல்லேகும்புர பாலத்திற்கு அருகில் உள்ள வீதியில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹப்புத்தளை, யஹலபெத்த, கிரிவடுஹின்ன பகுதியைச் சேர்ந்த 40 வயதான டி.எம். சமன் திஸாநாயக்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹப்புத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், ஸ்தல பரிசோதனைகளை மேற்கொண்டனர். உயிரிழந்த நபரின் தலை மற்றும் கைகளில் காயங்கள் இருந்தன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹப்புத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் ஆலோசனைக்கமைய, ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் சேபால ரத்நாயக்கவின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ராமு தனராஜ்










