ஹப்புத்தளை நகரின் வர்த்தக நிலையங்களை டிஜிடல் மூலம் விளம்பரம் செய்யும் கட்டுப்பாட்டு நிலையம் (இன்று) 21-12-2021 பகல் 2 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீயினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதினால், ஏனைய சுவீப் விற்பனை நிலையங்களுக்கு தீ பரவாது தடுக்கப்பட்டது.
நகரின் வர்த்தக நிலையங்களை ஒலிபெருக்கி மூலமும், டிஜிடல் காட்சிப்பலகைகள் ஊடாகவும், விளம்பரம் செய்யப்பட்டு வருவது வழக்கம். இவ் விளம்பரகட்டுப்பாட்டு நிலையத்திலேயே தீ ஏற்பட்டது.
மின் ஒழுக்கே இத்தீக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. பல இலட்ச ரூபா மின் உபகரணங்கள், டிஜிடல் உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. ஹப்புத்தளைப் பொலிசார் இத் தீ பரவல் குறித்து, புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.










