புதையல் தோண்டிக் கொண்டிருந்த 10 பேரை, பண்டாரவளைப் பொலிசார் (இன்று) 04-08-2021ல் கைது செய்துள்ளனர்.
ஹப்புத்தளை – பிளக்வூட் மற்றும் விஹாரகலை பெருந்தோட்டப் பகுதிகளில், மேற்படி புதையல் தோண்டப்பட்டதாகும்.
புதையல் தோண்டப்படுவது குறித்து, பண்டாரவளை விசேட குற்றத் தடுப்பு பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து, அப் பொலிசார் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சுற்றிவலைத்து, புதையல் தோண்டிக் கொண்டிருந்த 10 பேரையும், (இன்று) 04-08-2021ல் கைது செய்துள்ளனர்.
அத்துடன், குறிப்பிட்ட 10 பேரும் பயணித்த இரு வாகனங்களையும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட 10 பேரும் விசாரணையின் பின்னர், பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, பண்டாரவளைப் பொலிசார் தெரிவித்தனர்.
எம். செல்வராஜா, பதுளை










