ஹப்புத்தளையில் விபத்து – 8 பேர் காயம்

ஹப்புத்தளை, ஒரதரவ பகுதியில் வேனொன்றும், பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயனித்த 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.                                   

நுவரெலியாவில் இருந்து கொஸ்லாந்தை பகுதிக்கு திருமண நிகழ்வுக்கு வந்தவர்கள் மீண்டும் தமது இருப்பிடம் நோக்கி திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனில் பயனித்த 8 பேர் காயமடைந்த நிலையில் தியத்தலவை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ராமு தனராஜா

Related Articles

Latest Articles