ஹய்டியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 300 இற்கும் மேற்பட்டோர் பலி!

ஹய்டியில் ற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்த பட்சம் 300 பேர் பலியாகியுள்ளனர்.

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹய்டியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. ஹய்டியில் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 300 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது

Related Articles

Latest Articles