ஹரின், மனுஷவுக்கு எதிராக நடவடிக்கை – ஐ.ம.ச. மத்திய குழு தீர்மானம்

அரசுக்கு ஆதரவு வழங்கி, அமைச்சு பதவி பெற்றுக்கொண்ட தமது கட்சி உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று மாலை கூடியது.

இதன்போது சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் விரிவாக அலசி ஆராயப்பட்டன.

அத்துடன், கட்சியின் முடிவைமீறி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட கட்சி உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles