வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் ஹர்த்தாலால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராகவும், தமிழர் பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் – மரபுரிமைகள் அழிப்புக்கு எதிராகவுமே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இதற்கமைய நகரங்கள், கிராமங்களிலும் வர்த்தக நிலையங்கள் முழுமையாக பூட்டப்பட்டதுடன் தனியார் பேருந்து சேவைகளும் இடம்பெறவில்லை என்பதுடன் மாணவர்களும் பாடசாலைகளுக்கு செல்லவில்லை.
ஆனாலும் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டதுடன் அரச வங்கிகள் உள்ளிட்ட அரச திணைக்களங்களும் வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹர்த்தால் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்வு முற்றாகப் பாதிக்கப்பட்டதுடன் வைத்திய சாலைகளுக்குச் செல்லும் நோயாளர்கள், பஸ் பயணிகள், அன்றாட தொழிலாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்










