ஹாலிஎல பகுதியில் புதையல் தோண்டியவர் கைது!

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரியகொல்ல பகுதியில் புதையல் தோண்டிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டுக்கு பின்புறம் புதையல் தோண்டுவதாக நேற்றைய தினம் பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கீரியகொல்ல பகுதிக்கு விரைந்த பதுளை குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேகத்துக்கு இடமான இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்ற ப்பட்டதோடு சந்தேக நபரையும் புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் குற்றத்தடுப்பு பொலிஸார் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இன்றைய தினம் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles