ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர, சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நாளை சிஐடிக்கு வருமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஹிருணிக்கா குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற சில போராட்டங்களுக்கு ஹிருணிக்கா பிரேமசந்திர தலைமை தாங்கியிருந்தார். ஜனாதிபதியின் வீட்டைக்கூட முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.