ஹிஷாலினி குறித்து முற்போக்கு கூட்டணிதன் கடமையை செய்கிறது – எவருக்காகவும் இதை கைவிட மாட்டோம்!

மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார் ஆகிய எம்பீக்கள், சிறுமி ஹிஷாலினி தொடர்பில் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள் என கூசாமல் பொய் பேசும் மொட்டு கட்சி எம்பி டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சி எம்பி முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க கட்சி அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?

சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் என் கடமையை சிறப்பாக செய்துள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம்;

(1)பொரளை நிலையை பொலிஸ் விசாரணை ஆய்வு

(2)பொலிஸ் தலைமையக விசாரணை மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் ஆய்வு (3)பாராளுமன்றத்தில் உரை மற்றும் நேரடியாக பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி

(4)மலையகத்தில் நேரடி ஆர்ப்பாட்டங்கள்

(5)சிங்கள மொழி ஊடக மாநாடுகள்

(6)சிங்கள தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் ஆகியவற்றை செய்த பின்னர்தான், “சிறுமி ஹிஷாலினி” விவகாரம் தேசிய அரங்கில் சூடு பிடித்தது என்பதை கூப்பாடு போடும் அரசாங்க அரசியல்வாதிகள் உணரவேண்டும்.

இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம் போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

இவ்விவகாரம் பற்றி தமுகூ தலைவர் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

இன்று தோட்டத்தொழிலாளர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது வருமானம் எமது நல்லாட்சியின் 2019ம் ஆண்டை விட, இன்று வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு காரணம், ஒருபுறம், ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி தருகிறேன் என்று கூறிவிட்டு இந்த அரசாங்கம், வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு, சும்மா இருக்கிறது. மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு உயர்ந்து விட்டது.

சிறுமி ஹிஷாலினி உட்பட, தோட்டத்தொழிலாளர்களின், பிள்ளைகள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வந்து ஆபத்தில் விழுவதற்கு பெருந்தோட்டத்துறையில் இன்று நிலவும் அதிமோச வறுமைதான் காரணம். இந்த அதிமோச வறுமைக்கு காரணம் என்ன? இந்த அரசாங்கத்தின் தோட்டத்தொழிலாளர் தொடர்பான அக்கறையின்மை, அரசில் இருக்கின்ற இதொகாவின் மௌனம் ஆகியவையே பிரதான காரணங்கள் என்பதை, இன்று சிறுமி ஹிஷாலினி பற்றி பொய்யாக கூப்பாடு போடும் எம்பி டிலான் பெரேரா, அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, எம்பி முஹமட் முசாம்பில் போன்றவர்கள் உணர வேண்டும்.

சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் என் கடமையை சிறப்பாக செய்துள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம்; (1)பொரளை நிலையை பொலிஸ் விசாரணை ஆய்வு (2)பொலிஸ் தலைமையக விசாரணை மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் ஆய்வு (3)பாராளுமன்றத்தில் உரை மற்றும் நேரடியாக பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி (4)மலையகத்தில் நேரடி ஆர்ப்பாட்டங்கள் (5)சிங்கள மொழி ஊடக மாநாடுகள் (6)சிங்கள தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் ஆகியவற்றை செய்த பின்னர்தான், “சிறுமி ஹிஷாலினி” விவகாரம் தேசிய அரங்கில் சூடு பிடித்தது.

இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம் போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

“இந்த பிரச்சினை தமிழ், முஸ்லிம், சிங்கள இனப்பிரச்சினை அல்ல. இது ஒரு சட்டம், ஒழுங்கு பிரச்சினை” என கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் இலங்கை பாராளுமன்றத்தில், மிக நிதானமாகவும், மிக பொறுப்புடனும் தெளிவாக பலமுறை எடுத்து கூறி விட்டேன்.

ஹிஷாலினி வீட்டுக்கு சென்று மௌன அஞ்சலி செலுத்தியதை தவிர, அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் இதொகா, இந்த பிரச்சினை பற்றி கூறும்படியாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை. எதுவாயினும், இப்போது விசாரணை நடக்கின்றது. அதற்கு அனைவரும் கண்காணிப்புடன் கூடிய பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

இந்நிலையில், எம்மை பற்றி கூசாமல் பொய் பேசி குறை கூறும், ஸ்ரீல சுதந்திர கட்சி எம்பி டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சி எம்பி முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?

நாம் எமது ஆட்சியில் துண்டு விழும் மேலதிக 50/= ரூபாவை தர தவறிவிட்டோம் என குற்றம் சாட்டிய இவர்கள் தோட்டத்தொழிலாளருக்கு இவர்களின் ஆட்சியில் இன்று என்ன செய்துள்ளார்கள்?

ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறோம், என்று கூறிவிட்டு, வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு, இந்த அரசாங்கம் சும்மா இருக்கிறது. மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு உயர்ந்து விட்டது. ஆகவே பத்து நாள் வேலையும், குறைந்த வருமானமும் தோட்ட தொழிலாளரை வாட்டுகிறது. வறுமை பெருந்தோட்ட துறையில் தாண்டவமாடுகிறது.

இதுவே இன்று சிறுமி ஹிஷாலினி உட்பட கணிசமான பெருந்தோட்ட துறை பிள்ளைகள், பெண்கள், ஆண்கள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வர பிரதான காரணம்.

வறுமை எல்லோருக்கும் பொதுவானதுதான். அதனால்தான், இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் தொழில் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று சொல்லொணா துன்பங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். இப்படிதான், மூதூரை சேர்ந்த ஏழை முஸ்லிம் சிறுமி றிசானா நபீக், சவுதி அராபியா சென்று அங்கே கொல்லபட்டார்.

ஆனால் பெருந்தோட்டதுறையில், இன்று ஏற்பட்டுள்ள நிலைமை, 70 களில் அன்றைய சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சிக்கால நிலைமையை நெருங்கி கொண்டு இருக்கிறது என்பதை இந்த அறிவு கெட்ட அமைச்சர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். எதிரணியில் இருக்கும் எம்மை பொய்யாக குறை கூறுவதை விட்டு, இவர்கள் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் ஆவன செய்ய வேண்டும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles