யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்குழுவான ஹூதி பயன்படுத்தும் தளங்கள்மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து முன்னெடுத்த இந்த தாக்குதலுக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவளித்துள்ளது.
குறித்த கூட்டு தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். செங்கடலில் வணிக கப்பல்கள்மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைக்கொண்டு தாக்கும் ஹூதி
களுக்கு இது பதிலடியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
” தாக்குதலை நடத்துவதற்கான முடிவு இலகுவாக எடுக்கப்படவில்லை.” – என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
” ஆஸ்திரேலியா கப்பல் அனுப்பவில்லை. எனினும், படையினர் சென்றிருந்தனர்.” – எனக் கூறப்படுகின்றது.
ஹமாசுக்கு எதிராக போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஏமனில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹூதி
கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்திவருகின்றது.
பாதுகாப்புக்கு அமெரிக்க போர் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்த போதிலும் ஹ_தி தாக்குதலை குறைக்கவில்லை. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் செங்கடலில் வணிக கப்பல்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்தன.
இந்த நிலையில் நேற்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை ஒன்றிணைந்து கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமனில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இராணுவ தாக்குதல்களை நடத்தியுள்ளன.