ஹெரோயின் போதைப்பொருளுடன் பசறையில் இருவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பதுளை, பசறையில் கைது செய்யப்பட்டுள்ளது.

பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு இது தொடர்பில் இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து பதுளை குற்றத்தடுப்பு பொலிஸாரும், பசறை பொலிஸாரும் இணைந்து, பசறை, கோயில்கடை பகுதியிலுள்ள இருப்பிடமொன்றை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதன்போது 4, 730 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், 19 மற்றும் 21 வயதுகளுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் இன்று பதுளை நீதவான், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles