ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கம்பளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது!

 

ஹெரோயின் போதைப்பொருள் சகிதம் மூன்று சந்தேக நபர்கள், கம்பளை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26, 34 மற்றும் 43 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கம்பளை, தொலுவ வட்டகொடவத்த பகுதியிலுள்ள வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2,173 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் பேராதனை, சியதகலவத்த பகுதியில் 34 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 2,840 மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த 43 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டார். அவர் வசமிருந்தும் 2,530 ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

க.யோகா

Related Articles

Latest Articles