இலங்கைக்கு தெற்கே 630 கடல் மைல் தொலைவில் பயணித்த படகொன்றிலிருந்து ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராம் எடையுடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கப்பலில் பயணித்த வெளிநாட்டவர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பொருளுடன் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
