மஹியங்கனை பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 100 போதைமாத்திரைகள் மற்றும் 125 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (12) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிகொலால மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொழும்பில் இருந்து போதைப்பொருள்
கொண்டு வந்து மஹியங்கனை பகுதிகளில் விற்பனை செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது சந்தேகநபரிடம் இருந்து போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ. எஸ்.பலிபன மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப டபிள்யூ.டபிள்யூ.எம்.விஜேரத்ன ஆகியோரின் பணிப்புரையின் பேரில், போசா ஜயசேகர (66024), போசா சந்திரசேன (67664), போகோ தாரக (81655), போகோ பிரேமரத்ன (81362), போகோ குலவம்ச (104301) மற்றும் பொகோ குலவம்ச (104301) (9161) சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
