ஹொரண பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்னால் வைத்து நபரொருவர் வெட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
பானதுறை, சுனாமி வீட்டு திட்ட பகுதியில் வசிக்கும் நபரொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.
