ஹொரோயின் வியாபாரி கைது!

கிராதுருகொட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட”பொடி பிந்து” என அழைக்கப்படும் நபர் 3280 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்போருயாய பகுதியில் வைத்து நேற்று மாலை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 84, கனிசம தொகுதி, கல்போருயா, கிராதுருகொட்ட என்ற முகவரியில் வசிக்கும் 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னர் குறித்த பகுதிகளில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பின்னர் கொழும்பு பகுதிக்கு சென்று அங்கிருந்து இருந்து ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை கொண்டுவந்து கிராதுருகோட்டே பகுதியில் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் குறித்த சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

பதுளை பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல பதுளை பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.எஸ்.பாலிபான ஆகியோரின் பணிப்புரையின் பேரில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கிராதுருகொட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதேஷ் சதுரங்க ஆகியோர் இணைந்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவை பெற உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles