‘ஹொலிகொப்டர்’ கூட்டணியால் எங்களுக்கு எவ்வித சவாலும் கிடையாது. உள்ளாட்சிமன்ற தேர்தலில் நாம் வெற்றிநடை போடுவோம் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் ‘சுதந்திர மக்கள் கூட்டணி’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் கூட்டணி (ஹெலிகொப்பர் சின்னம்) உதயமாகியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி உட்பட 13 கட்சிகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையிலேயே இந்தக் கூட்டணியை மொட்டு கட்சி விமர்சித்துள்ளது.
” பதவிகளுக்காகவும், தலைமைத்துவத்துக்காகவும் சண்டையிடுபவர்களே புதிய கூட்டணியில் உள்ளனர். அதனால்தான் தலைவர் ஒருவரை தெரிவுசெய்யாமல், தலைமைத்துவ சபையை நியமித்துள்ளனர். ” – என மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.










