08 ஆம் திகதி சஜித் தலைமையில் மெகா கூட்டணி உதயம்! புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்து!!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்படவுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஆகஸ்ட் 8 ஆம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இதற்கான நிழ்வு இடம்பெறவுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியினர், முஸ்லிம் காங்கிரஸினர், டலஸ் அழகப்பெரும, ரொஷான் ரணசிங்க, பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க போன்ற பலர் கூட்டணியில் இணையவுள்ளனர்.

கூட்டணிக்கு பின்னர் பரந்துபட்ட எதிர்க்கட்சி கூட்டணியாக ஜனாதிபதி தேர்தல் பிரசார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles