ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 03 வது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இன்றுகாலை 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதுடன் அதனையடுத்து ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இடம் பெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று நடைபெறும்எளிமையான நிகழ்வில் வழமையாக மேற்கொள்ளப்படும் சிறப்பு மரியாதை பீரங்கி வேட்டுக்கள் இடம்பெற மாட்டாதென்றும் அத்துடன் ஜனாதிபதியின் கொடி ஏற்றப்பட மாட்டாதென்றும் தேசியக்கொடி மாத்திரமே பறக்க விடப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.










