1 கோடி இன்னும் தரலையா? சர்வைவர் டைட்டில் ஜெயித்த விஜயலக்ஷ்மி அதிர்ச்சி புகார்

ஜீ தமிழ் நடத்திய சர்வைவர் ஷோ சமீபத்தில் தான் நிறைவடைந்தது. ஆரம்பத்தில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் போக போக வரவேற்பு அதிகம் குறைந்துபோனது. இருப்பினும் ஷோ முடிவடைந்து அதில் விஜயலக்ஷ்மி டைட்டில் ஜெயித்து ஒரு கோடி ருபாய் பரிசு பணத்தை வென்றார்.

ஷோவில் ஆரம்பத்தில் விஜயலக்ஷ்மிக்கு ஆதரவு இருப்பது போல சமூக வலைத்தளங்களில் தெரிந்தது, ஆனால் ஒருகட்டத்திற்கு பிறகு அவருக்கு நெகடிவ் கமெண்டுகள் தான் அதிகம் வர தொடங்கியது.

தற்போது அது பற்றி பேட்டி அளித்திருக்கும் விஜயலக்ஷ்மி தன்னை பற்றி ட்ரோல்கள் தானாக வரவில்லை, மற்ற போட்டியாளர்கள் சிலர் பணம் கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்து இப்படி நெகடிவ் கமெண்ட் போட வைத்திருக்கிறார்கள் என புகார் தெரிவித்து உள்ளார்.

மேலும் ஒரு கோடி ருபாய் பரிசு பணம் தன் கைக்கு வந்து சேர சில மாதங்கள் ஆகும் என அவர் கூறி உள்ளார். அவர்கள் ரூல்ஸ் படி டெலிகாஸ்ட் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து தான் பணம் கொடுப்பார்கள் என அவர் கூறி உள்ளார்.

Related Articles

Latest Articles