ஐக்கிய அரபு இராச்சியம் – அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் சர்வதேச கண்காட்சி இடம்பெறவுள்ளது.
குறித்த கண்காட்சி எதிர்வரும் (02.09.2023) ஆம் திகதி தொடங்க இருகின்றது. இந்நிலையில், எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் சார்பில் பருந்து ஏலம் நடைபெற்றுள்ளது.
இடம்பெற்ற ஏலத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச பண்ணைகளிலிருந்து பல்வேறு வகையான பருந்துகள் காணப்பட்டன.
அவற்றில் சிறந்த மற்றும் அரிய வகையான பருந்துகளும் காணப்பட்டன. அதில் வெள்ளை நிறத்தையுடைய அபூர்வ அமெரிக்க பருந்து ஒன்று 1 மில்லியன் டொலருக்கு (இந்திய மதிப்பின் படி 2 ,26, 40000 ரூபாய்க்கு ) ஏலத்தில் விடப்பட்டுள்ளது .










