தெற்கு அதிவேக நெடுஞ்சாலை களனிகம இடைமாறல் அலுவலகத்தின் பொறுப்பிலுள்ள இரு பெட்டகங்களில் இருந்த 1.4 மில்லியன் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
குறித்த பணத்துக்கு பொறுப்பாக பணியாற்றிய பிரதான காசாளர் ஒருவரும் காணாமல் போயுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பில் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது.
முறைப்பாட்டிற்கமைய ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் காணாமல் போயுள்ள நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.