10 ஆண்டுகளுக்கான உறுதியான அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குமாறு யோசனை!

நாட்டில் பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்ட 10 ஆண்டுகளுக்கான ஒரு உறுதியான அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குமாறு கோபா குழு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்)  திஸ்ஸ விதாரண தலைமையில்  கூடிய போதே வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய திட்டங்கள், அனுமதி கிடைக்கப்பெற்று இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையை தவிர்த்துக்கொள்ள இந்தத் திணைக்களத்துக்குக் காணப்படும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் இந்தக் குழுக் கூட்டத்தில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது.

இதன் போது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிடுகையில், அரசியல் அதிகாரங்கள் மாற்றமடைந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 10 வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தக் கூடிய மாற்றமடையாத திட்டவட்டமாகக் கண்டறியப்பட்ட அபிவிருத்தித் திட்டமொன்று இருக்கவேண்டும் எனத் தெரிவித்தார். இது பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் அதிகாரத்தின் செல்வாக்கு இன்றிச் செயற்படுவதற்கு இவ்வாறான தேசிய திட்டமொன்றை உருவாக்கவேண்டிய சரியான தருணம் இதுவாகும் எனக் குழுவில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அரசியல் அதிகாரங்கள் மாற்றமடைந்தாலும் நாடு மாற்றமடைவதில்லை என்பதால் நாட்டின் அபிவிருத்திக்குத் திட்டவட்டமான பொருளாதார திட்டமொன்று அவசியம் என இதன்போது கோபா குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, ஒருசில அபிவிருத்தித் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது, நிறைவேற்று அதிகாரத்தின் தீர்மானத்துக்கு அமைய இவ்வாறு சில திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வருகை தந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். அது தொடர்பில் அதிகாரிகளுக்குச் செல்வாக்குச் செலுத்த முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அரசியல் அதிகாரம் பிழையான தீர்மானங்களை எடுக்கும் போது அவற்றை சுட்டிக்காட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி)  ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இதுபோன்ற விடயங்களில் அதிகாரிகள் ஈடுபட்டு ஆலோசனை வழங்குவதற்கு எந்த வழிமுறையும் இல்லையாயின், அதனை உருவாக்குவதற்குத் தேவையான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கு கோபா குழு தேவையான ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை தயாரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles