10 ஆயிரம் வீட்டுத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்

“இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் அபிவிருத்திக்காக மூன்று பில்லியன் ரூபா நிதியினை வழங்க பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இணக்கம் தெரிவித்தமை இந்திய இலங்கை உறவின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இதற்கான அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு மலையக மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

” வரலாற்று சிறப்புமிக்க இவ்விஜயம் நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார மீள்கட்டமைப்பை இலக்காகவே கொண்டு அமைந்தது என்பது முக்கிய அம்சமாகும்.

கைத்தொழில், வலுசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், கால்நடை அபிவிருத்தி மற்றும் பால் உற்பத்தி போன்ற பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுடன் இலங்கை இந்தியாவிற்கு இடையிலான விமான வழி மற்றும் கப்பல் வழி போக்குவரத்து துறை அபிவிருத்தி செய்த தொடர்பாகவும் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்நிலையில் எமது மக்களின் நலனுக்காக மூன்று பில்லியன் நிதி உதவி வழங்கும் தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்க விடயம். ஆகவே பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பாரத் தெரிவித்தார்.

மேலும் நிதி உதவியை கல்வி அபிவிருத்தி மற்றும் சுகாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு செயல்பட அவர்கள் தீர்மானித்த உள்ள நிலையில், பெருந்தோட்ட சுகாதாரத்துறை மற்றும் விஞ்ஞான துறை சார்ந்த கல்வித்துறையை அபிவிருத்தி செய்வதற்காக தான் அமைச்சரிடம் ஆவணம் செய்ய உள்ளதாக பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

மேலும் இந்திய அரசினால் வழங்கப்பட்ட 4000 வீடுகள் முழுமை அடைந்துள்ள நிலையில் 800 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டின் ஊடாக இவ்வீடுகளுக்கு தேவையான குடிநீர் வசதி மின்சார வசதி மற்றும் பாதை வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

அடுத்தக்கட்ட 10,000 வீடு திட்டத்திற்கு தேவையான நிலங்களை விடுவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அவ் வீடுகளை பத்து பர்ச்சேஸ் காணிப் பரப்பில் நிறுவுவதற்கும் அதற்குத் தேவையான நில உரிமையை வழங்குவதற்கும் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளோம்.

அடுத்த மாதம் அளவில் ஆரம்பிக்கப்பட உள்ள இவ் வீட்டுத்திட்டங்களுக்கு நிதியத்தின் ஊடாக சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் சுத்தமான குடிநீர் திட்டங்கள் மற்றும் பண்ணை வளர்ப்பு திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது என பாரத் அருள்சாமி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Related Articles

Latest Articles