10 ஆயிரம் வீட்டு திட்டம் – இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களுடன் இரண்டு தனி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

06 மாகாணங்களின் 11 மாவட்டங்களில் நான்காம் கட்டத்தின் கீழ் இந்திய வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 60,000 இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் முதல் இரண்டு கட்டங்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், பெருந்தோட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் 4,000 வீடமைப்பு திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையுடனான இந்தியாவின் மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி ஒத்துழைப்பு கூட்டுறவில் வீடமைப்பு திட்டம் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய வீட்டுத் திட்டத்திற்கு அப்பால், இலங்கையின் 25 மாவட்டங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்களின் கீழ் 2400 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles