” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்சஸ் காணி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணியை வழங்கினாலும் நிதி (அரச பங்களிப்பு) இல்லாவிட்டால் வீடுகளை நிர்மாணிக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. காணி பகிர்வு விடயத்தில் தாமதம் ஏற்பட இதுவும் காரணமாகும்.
எனவே, தற்போது மாற்று தேர்வாக தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது, அதாவது, நிதி உதவி (அரச பங்களிப்புடன்) கிடைக்காவிட்டால் தம்மிடம் உள்ள நிதி அல்லது கடன் பெற்றாவது வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கு பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும்.”
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.