10 மாதங்களுக்குள் 62 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்! 32 பேர் உயிரிழப்பு

நாட்டில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 62 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.

பிரதமருடனான கேள்வி – பதில் நேரத்தின்போது ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மேஜர் சுதர்சன் தெனிபிட்டிய எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

” இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுக்களால் 62 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 37 பேர் காயம் அடைந்துள்ளனர்.” – எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles