நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து வெளியான திரைப்படம் டாக்டர்.
கடந்த அக்டோபர் 9-ம் தேதி வெளியாகி, இன்றுவரை சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் டாக்டர் படம் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை மீண்டு எழ செய்துள்ளது.
படம் வெளியாகி அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
டாக்டர் படம் வெளியாகி இன்றுவரை கிட்டத்தட்ட 4 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ 98 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இன்று சண்டே என்பதால் திரையரங்கிற்கு எப்படியும் அதிகளவில் கூட்டம் வரும், மேலும் கேரளாவிலும் இப்படம் சமீபத்தில் வெளியாகியிருப்பதால் இன்று 100 கோடியை வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.