விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச 100 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் சகிதம் எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே அவர் இவ்வாறு செல்கின்றார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு விடுத்த அழைப்பின் பிரகாரம், மஹிந்தவின் விசேட பிரதிநிதியாகவே நாமல் இந்தியா செல்கின்றார்.

குறித்த விமான நிலையம் பெளத்த கலாசாரத்தை விருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக இந்திய தரப்பு கூறுகிறது. இந்தியாவால் விசேட விமான வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.
இதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடாக இந்தியாவிலுள்ள பல முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பதற்கு பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஏற்பாடு செய்துள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










