பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஹோன்சி ஹோன்சி, என்பீலட், டிக்கோயா தெற்கு பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி தாய்மாருக்கு கொவிட் – 19 தடுப்புக்கான சினோபாம் தடுப்பூசியின் 2ஆவது அலகு இன்று செலுத்தப்பட்டது.
டிக்கோயா நகர மண்டபத்தில் தடுப்பூசி ஏற்றும் பணி இடம்பெற்றது. சுமார் 100 கர்ப்பிணி பெண்கள் 2ஆவது அலகு தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர் என ஹோன்சி பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் மல்தெனிய தெரிவித்தார்.
க.கிஷாந்தன்
