” ஆயிரம் ரூபா என்பது வெறும் மாயை. சம்பள உயர்வு என்ற போர்வையில் தோட்டத் தொழிலாளர்களின் வேலை சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. 700 ரூபா சம்பளம் வழங்கப்பட்ட காலத்தில்கூட உரிய சம்பளம் கிடைத்தது. ஆனால் இன்று அவ்வாறு கிடைப்பதில்லை என தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர். கொழுந்து இல்லாத காலத்தில் எவ்வாறு 20 கிலோ பறிக்க முடியும்.
நாங்கள் ஆலமரம், அசைய மாட்டோம் என இராஜாங்க அமைச்சர் சூளுரைத்தார். வாயாலேயே வடை சுட்டார். ஆனால் இன்று என்ன நடக்கின்றது?
இணைந்து பயணிக்ககூடிய தரப்புகளுடன்தான் இணைந்து பயணிக்க முடியும். நாங்கள் மூன்று கட்சிகள் இணைந்து செல்கின்றோம். அராஜகமாக செயற்படுபவர்களுடன் இணைய முடியாது.
கூட்டு ஒப்பந்தம் தீர்வு அல்ல. தோட்டத் தொழிலாளர்களுக்கு தேயிலை காணிகள் பிரித்து கொடுக்கப்பட்டு அவர்களை நிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும்.”
இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
