1000 ஆண்டுகள் பழமையான ஏலியன்களின் உடல்களை காட்சிப்படுத்திய மெக்சிகோ!

‛ஏலியன்கள்’ குறித்த கட்டுக்கதைகள் தற்போது உலா வரும் நிலையில் மெக்சிகோவில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த 2 ஏலியன்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

பூமிக்கு அடிக்கடி வேற்று கிரக வாசிகள், பறக்கும் தட்டுகள் வந்து செல்வதாக நாம் சிறுவயதில் இருந்தே கதைகள் மூலமாக கேட்டு வருகிறோம். வேற்று கிரக வாசிகளை ஏலியன்ஸ் என்றும் கூறுகின்றனர். அதேபோல் அடையாளம் தெரியாமல் விண்வெளியில் இருந்து பறந்து வரும் பொருட்களை யுஎப்ஓ என்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் யூஃபாலஜிஸ்ட் ஜெய்ம் மவுசன் தலைமை தாங்கினார். அமெரிக்க கடற்படையின் முன்னாள் விமானி ரியான் கிரேவ்ஸும் உடனிருந்தார். இவர் தனது பணியின் போது வேற்று கிரக விண்கலத்தை பார்த்ததாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். தற்போது அமெரிக்கா இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் தான் மெக்சிகோ கண்காட்சியை நடத்தி முடித்துள்ளது. இந்த கண்காட்சியில் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மனிதர்களை போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. இந்த சடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles