1000 ரூபாவை காணோம் – 500 ரூபாவே நாட்சம்பளம்! தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிப்பு (படங்கள்)

மஸ்கெலியா மரே தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று 27.09.2021 தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மரே தோட்டத்தை சேர்ந்த போரஸ் பிரிவு, நல்லதண்ணி மேல்பிரிவு, கீழ்பிரிவு, வலதல பிரிவு, கெடஸ் பிரிவு, புதுக்காடு பிரிவு, ராஜ மலை பிரிவு ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்களே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

1000 ரூபா சம்பள அதிகரிப்பை தருவதாக கூறிய கம்பனிகள் தற்போது தம்மை ஏமாற்றியுள்ளதாகவும், முன்னர் நாளொன்றுக்கு 16 கிலோ பச்சை தேயிலையை பறித்து வந்த நிலையல் இன்று அது 20 கிலோவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தற்போது தேயிலை கொழுந்து விளைச்சல் இல்லாத நிலையில் தம்மால் 20 கிலோ பறிப்பது என்பது முடியாதுள்ளதோடு, தாம் தினசரி 7 தொடக்கம் 10 கிலோ தேயிலை கொழுந்தையே பறிக்கும் நிலையில் உள்ளோம்.

இதனால் கிலோவிற்கு ரூபா 50 படி தமக்கு தினக்கூலியாக ரூபா 350 தொடக்கம் ரூபா 500 வரை கிடைக்கப்பெறுகின்றது.

முன்னர் இந்த தேயிலை கொழுந்து பறித்தாலும், தமக்கு ரூபா 750 தினக்கூலியாக கிடைத்தது. இவ்வாறான நிர்வாகங்களின் கெடுபிகளால் தாம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி தோட்டங்களை பொறுப்பேற்றுள்ள நிர்வாகம் உரிய வகையில் செயற்படாததால் தோட்டங்கள் காடாகி வருகின்றன. சிறுத்தை உட்பட விலங்குகள் பெருகியுள்ளன. இதனால் பெரும் அச்சதுடனேயே பணி செய்ய வேண்டியுள்ளது. மேலும், பெருந்தோட்டத்துறை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல தொழிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. உயிரை கையில் பிடித்துக்கொண்டே வேலைசெய்ய வேண்டிய அவலம் தொடர்கிறது.

தோட்ட நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்துக்கொடுக்காமல் அடிமைகளைப் போல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என மரே தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இவ்விடயம் தொடர்பாக தோட்ட முகாமையாளர் வினவியபோது, இந்த பிரச்சினை தற்போது காணப்படுவதை அவர் ஏற்றுக்கொண்டார்.

மேலும், இந்த பிரச்சினை தமது தோட்டத்திற்கு மட்டுமன்று முழு பெருந்தோட்டத்துறைக்கும் உரியதாகவு காணப்படுகின்றது. தற்போதைய அதி கூடிய மழை விளைச்சலை இல்லாது செய்துள்ளதோடு, அரசின் கொள்கைக்கமைய இரசாயண உர பாவனையும் நிறுத்தப்பட்டுள்ளதால் தமக்கு தேயிலைக்கு இரசாயண உரத்தை பயன்படுத்த முடியாத நாளும் விளைச்சலில் வீழச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை நிவர்த்திப்பதற்காக தமது கம்பனியின் உயர்மட்டம் சில வேலைத்திட்டங்களை தற்பொது முன்னெடுத்துள்ளதோடு, அதற்கான பலன்களை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்போம்.

க.கிஷாந்தன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles