‘1000 ரூபாவை தடுப்பதற்கான தோட்டக் கம்பனிகளின் முயற்சி தோற்கடிக்கப்படும்’

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை தடுப்பதற்கு கம்பனிகள் முயற்சித்தால் அதனை முறியடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – என்று பெருந்தோட்டத்துறை அமைச்சரும், அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை கூட்டு ஒப்பந்தம் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கே தொழில் அமைச்சர் முயற்சித்தார். பல சுற்று பேச்சுகளையும் நடத்தினார். ஆனால் சம்பள உயர்வு தொடர்பில் அரசு கொள்கை அடிப்படையில் எடுத்த முடிவை ஏற்பதற்கு கம்பனிகள் அக்கறைக்காட்டவில்லை.

இதனால்தான் சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தொழில் அமைச்சர்  நிமல் சிறிபாலடி சில்வா நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக சில கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளன. சட்ட ரீதியில் எழும் சவால்களுக்கு பதிலளிப்பதற்கு தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

அதேவேளை, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியை முறியடிப்பதற்கு கம்பனிகள் முற்பட்டால், அதனை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசு பின்நிற்காது.” – என்றார்.

Related Articles

Latest Articles