பத்தாயிரம் இலங்கையர்களுக்கு தமது நாட்டில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு மலேசிய அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு மனிதவள அபிவிருத்தி அமைச்சர் M. சரவணன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்திற்கொண்டு, அந்த நாட்டு அமைச்சரவை கடந்த 14ஆம் திகதி கூடிய போதே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, அந்த நாட்டில் காணப்படுகின்ற வேலைவாய்ப்பு வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இலங்கையர்களை உள்வாங்குமாறு அந்த நாட்டு தொழில் வழங்குநர்களிடம் மலேசிய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
