பூனையின் செயலால் சீனாவில் பற்றி எரிந்த வீடு

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4 ஆம் திகதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டில் இருந்த மின்சார குக்கரை வீட்டு உரிமையாளர் அணைத்து வைத்திருந்த நிலையில், வீட்டில் அவர் செல்லமாக வளர்த்த பூனை அந்த மின்சார குக்கரை ‘ஆன்’ செய்ததும், அதனால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்ததும் தெரிய வந்தது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயனர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

Related Articles

Latest Articles