ராஜஸ்தான் – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

கணிக்க முடியாத அணியாக திகழும் ஐதராபாத் அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்த சீசனில் முதலில் பேட்டிங் செய்து 3 முறை 250 ரன்களுக்கு மேல் குவித்து வரலாறு படைத்துள்ள அந்த அணி, 2-வது பேட்டிங்கில் ஒருமுறை கூட 200 ரன்னுக்கு மேலான இலக்கை எட்டிப்பிடிக்கவில்லை. கடைசி 2 ஆட்டங்களில் இலக்கை விரட்டுகையில் பெங்களூரு, சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.

எனவே அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது.ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (338 ரன்), அபிஷேக் ஷர்மா (303), ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அதிரடியில் பிரமாதப்படுத்துகிறார்கள்.

அதேநேரத்தில் அவர்களின் ஆட்டம் பொய்த்தால் அந்த அணியின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறுகிறது. ஆல்-ரவுண்டர் எய்டன் மார்க்ரம், அப்துல் சமத் பேட்டில் இருந்து இன்னும் போதிய ரன்கள் வரவில்லை. இவர்களும் பார்முக்கு திரும்பினால், ஐதராபாத்தின் பேட்டிங் மேலும் வலுவடையும்.

பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர்குமார் நல்ல நிலையில் உள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, ஒரு தோல்வி (குஜராத் அணிக்கு எதிராக) என்று 16 புள்ளி பெற்று முதலிடத்தில் கம்பீரமாக வீறுநடைபோடுகிறது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன் (385 ரன்), ரியான் பராக் (332), ஜோஸ் பட்லர் (319), ஜெய்ஸ்வால் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா ஆகியோர் கலக்குகிறார்கள். அஸ்வினின் பந்துவீச்சு எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 9-ல் வெற்றியை தனதாக்கி இருக்கின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles