காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் என்றும் ஹமாஸ் இந்த போர் நிறுத்தம் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே பல மாதங்களாக போர் நடந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலில் நுழைந்து அதிரடி தாக்குதலை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இஸ்ரேல் இந்த போரை தொடங்கியிருக்கிறது. பல மாதங்களாக இந்த போர் நீடித்து வருகிறது.
இந்தநிலையில், காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான போர் மற்றும் ஆக்கிரமிப்பை நிறுத்தினால் முழுமையான உடன்படிக்கைக்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்தது.
இது தொடர்பாக ஹமாஸ் கூறுகையில், “ ஒரு பக்கம் போர் நிறுத்த பேச்சு நடத்தியபடியே, மற்றொரு பக்கம் எங்கள் மக்கள் மீது இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலின் இந்த கொள்கையை ஹமாஸ், பாலஸ்தீனிய அமைப்புகள் ஏற்காது.
காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான போர் மற்றும் ஆக்கிரமிப்பை நிறுத்தினால் முழுமையான போர் நிறுத்தத்திற்கான உடன்பாட்டை பின்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம். பணய கைதிகளை விடுவிப்பது முதல் விரிவான ஒப்பந்தத்திற்கு தயாராக இருக்கிறோம் என்று கூறியது.
இந்த நிலையில் தான் காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
“ இஸ்ரேல் முன்மொழிந்துள்ள திட்டத்தின் படி ,ஆறு வார காலத்திற்குள் படிப்படியாக மக்கள் மிகுந்த இடத்தில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறும்.” – எனவும் பைடன் கூறியுள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவதற்கான இந்த வாய்ப்பை தவற விட்டு விடக்கூடாது. இஸ்ரேல் விரிவான சண்டை நிறுத்தம் கொண்டு வருவதற்கும் பினையக்கைதிகளை விடுவிப்பதற்கான விரிவான திட்டம் இதுவாகும்.
காசாவில் முழுமையான சண்டை நிறுத்தம், காசாவில் மக்கள் நிறைந்த பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெறுதல், பினைக்கைதிகளை விடுவிப்பது என இதற்கு ஈடாக பாலஸ்தீனிய சிறைக்கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும் ஆகியவை இந்த 6 வார காலக்கட்டத்தில் நடக்கும் என்று ஜோ பைடன் கூறினார்.
இந்த ஆறு வார காலக்கட்டத்தில் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர் நிறுத்தத்தை நீடிப்பது தொடர்பாக பேச் நடந்தால், சண்டை நிறுத்தம் தொடரும். போர் நடக்காது. ஹமாஸ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.