இலங்கையில் 9 பெருந்தோட்டக் கம்பனிகள், 10 ஆயிரத்து 579 ஹெக்டேயரில் முள்ளுத்தேங்காய் பயிரிட்டுள்ளன – என்று பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரால் தொடுக்கப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
- வட்டவல பெருந்தோட்டக் கம்பனி
- பொகவந்தலாவ பெருந்தோட்டக் கம்பனி
- கொட்டகல பெருந்தோட்டக் கம்பனி
- எல்பிட்டிய பெருந்தோட்டக் கம்பனி
- அகலவத்த பெருந்தோட்டக் கம்பனி
- அல்வத்த பெருந்தோட்டக் கம்பனி
- ஹெரன பெருந்தோட்டக் கம்பனி
- கேகால்ல பெருந்தோட்டக் கம்பனி
- நமுனுகல பெருந்தோட்டக் கம்பனி
ஆகியனவே நாட்டில் முள்ளுத்தேங்காய் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் கம்பனிகளாகும்.
முள்ளுத்தேங்காய் பயிர்ச்செய்கைக்கு 2019 நவம்பர் முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, இறப்பர், தென்னை, தேயிலை ஆகிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளது.” – என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
