ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இரு மாணவர்களுக்கிடையில் பாடசாலையில் வைத்து இடம்பெற்ற மோதலில் மாணவரொருவர் காயமடைந்துள்ளார்.
மாணவரின் கை முறிவடைந்துள்ளது. பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த மோதல் சம்பவம் நேற்று 27.04.2024. வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் காயங்களுக்குள்ளான மாணவனின் பெற்றோர் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த இரு நாட்களாக அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்த போதிலும் 27.06.2024அன்று மாணவர்கள் பாடசாலைக்கு சென்று இருந்தனர்.
குறித்த பாடசாலையில் தரம் 07ல் கல்வி பயிலும் இரண்டு மாணவர்களுக்கிடையில் வகுப்பறையில் வைத்தே இந்த மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்