பதுளை, சொரணாதொட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர்.
லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் நடுவே கவிழ்ந்துள்ளது. லொறியில் பயணித்த அறுவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நால்வர் பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரியவருகின்றது.
மொனறாகலை பகுதியை சேர்ந்த நால்வரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுமான நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்கள், தொழில் நிமித்தம் சென்றுவிட்டு திரும்பும்வழியிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
