ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் உட்பட 11 கட்சிகளின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இன்று எதிரணி பக்கம் அமர்ந்தனர்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போதே மேற்படி உறுப்பினர்கள் எதிரணி பக்கம் அமர்ந்தனர்.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவோம் என 11 கட்சிகள் அறிவித்துள்ளன.