11 நாட்களில் நாட்டில் ஈராயிரம் உயிர்களை பறித்த கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாட்களில் 2 ஆயிரத்து 13 பேர் பலியாகியுள்ளனர்.

ஆகஸ்ட் 14 முதல் 24 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி 14 ஆம் திகதி 161 பேரும், 15 ஆம் திகதி 167 பேரும், 16 ஆம் திகதி 171 பேரும், 17 ஆம் திகதி 170 பேரும், 18 ஆம் திகதி 186 பேரும், 19 ஆம் திகதி 195 பேரும், 20 ஆம் திகதி 198 பேரும், 21 ஆம் திகதி 183 பேரும் ,22 ஆம் திகதி 194 பேரும், 23 ஆம் திகதி 190 பேரும் , 24 ஆம் திகதி 198 உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles