110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல்!

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் மேலும் 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்யவுள்ளது.

இதற்கு பதிலாக, ஹமாஸின் பிடியில் உள்ள 5 தாய்லாந்து கைதிகள் உட்பட 8 பேரை அந்த அமைப்பினர் விடுதலை செய்கின்றனர்.

உலக நாடுகளின் உதவியால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.
இதையடுத்து, இரு தரப்பிலும் பல கட்டங்களாக பிணைக் கைதிகள் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தங்களின் பிடியில் இருந்த இஸ்ரேலிய பெண் இராணுவ வீரர் அகம் பெர்ஜரை ஹமாஸ் அமைப்பினர் காசா முனைப் பகுதியில் செஞ்சிலுவை சங்கத்திடம் நேற்று ஒப்படைத்தனர்.

அவரைத் தவிர, இஸ்ரேலைச் சேர்ந்த அர்பெல் என்ற 29 வயது இளைஞரையும், காடி மோசஸ் என்ற 80 வயது முதியவரையும், மேலும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் விரைவில் விடுவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், விடுவிக்கப்படும் தாய்லாந்து கைதிகள் குறித்து எந்த அடையாளங்களும் வெளியிடப்படவில்லை. இதற்கு பதிலாக, இஸ்ரேலின் பிடியில் உள்ள 110 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles