பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு தொடர்ச்சியாக அழைப்பை மேற்கொண்டு பொய்யான முறைப்பாடுகளை முன்வைத்துவந்த நபரொருவர் நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நோர்வூட், சென்ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்டத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ‘119’ என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி பல தடவைகள் பொய்யான முறைப்பாடுகளை முன்வைத்துள்ளார், இதனையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த நோர்வூட் பொலிஸார், நீதிமன்றத்தின் அனுமதியுடன் கைது செய்தனர். அவரிடமிருந்து தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது.
கைதானவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் செய்துள்ளனர்.
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்